உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 24, 2026 07:10 AM

அ நிறம் | அளவு
ஐ.சி.ஐ.சி.ஐ., புரூடென்ஷியல் லைப் நிறுவனத்தில் இருந்து புரூடென்ஷியல் நிறுவனம் வெளியேறிய நிலையில், ஐ.சி.ஐ.சி.ஐ., லைப் இன்சூரன்ஸ் என்ற புதிய பெயரில் காப்பீடு வணிகத்தை ஐ.சி.ஐ.சி.ஐ., தொடர்கிறது. இதற்கான பெயர் அறிமுக நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடைபெற்றது. புரூடென்ஷியல் நிறுவனம் முதலீட்டாளராக வெளியேறியிருந்தாலும், காப்பீடு துறையில் தங்கள் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை தொடரும் என்று ஐ.சி.ஐ.சி.ஐ., லைப் இன்சூரன்ஸ் தென்னிந்திய பிரிவு தலைவர் மணிகண்டன் ராஜாமணி தெரிவித்தார். 'யூலிப்' திட்டங்களுக்கு முன்பை விட தற்போது சிறப்பான வரவேற்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
