ADDED : ஏப் 13, 2025 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்:விளைச்சல் குறைவால், மிளகு விலை உயர்ந்து, கிலோ 850 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, ஊட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும், கேரளாவில் இடுக்கி, வயநாடு மாவட்டங்களிலும், கர்நாடகாவிலும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஜூன், ஜூலையில் பூ பூக்கும்போது மழை தேவைப்படும். கடந்தாண்டு பூ பூத்தபின் மழை இல்லாததால் பூக்கள் உதிர்ந்தன. அதன்பின் பெய்த தொடர் மழையும், பலன் கொடுக்கவில்லை.
எனவே விளைச்சல் கடுமையாக பாதித்தது. இந்தாண்டும் அதன் தாக்கம் தொடர்கிறது.
இதனால், கடந்த மார்ச்சில் மிளகு கிலோ 450 ரூபாயாக இருந்தது, தற்போது கிலோ 850 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

