மணப்பாறையில் பெப்சிகோ ஆலை 28 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
மணப்பாறையில் பெப்சிகோ ஆலை 28 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
ADDED : ஏப் 02, 2025 11:13 PM

சென்னை:அமெரிக்காவை சேர்ந்த, 'பெப்சிகோ' நிறுவனம் தொழில் துவங்குவதற்காக, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள உணவு தொழில் பூங்காவில், 28 ஏக்கரை, தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனம் ஒதுக்கீடு செய்துஉள்ளது.
'சிப்காட்' நிறுவனம், உணவு பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொழில் துவங்கும் வகையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், 158 ஏக்கரிலும், திருச்சி மணப்பாறையில், 138 ஏக்கரிலும், தேனியில், 152 ஏக்கரிலும், 330 கோடி ரூபாய் செலவில் உணவு பூங்காக்களை அமைத்துள்ளது.
இந்த பூங்காக்களில் உள்ள தொழில் மனைகள் நிறுவனங்களுக்கு விற்கும் பணி நடக்கிறது.
அதன்படி, தற்போது பெப்சிகோ நிறுவனம் சிப்ஸ் தயாரிப்பதற்கான ஆலை அமைக்க, மணப்பாறை தொழில் பூங்காவில் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, திண்டிவனம் சிப்காட் உணவு பூங்காவில், 400 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை, 'டாபர் இந்தியா' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.