sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

நிலக்கடலை, உரங்களுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க மனு

/

நிலக்கடலை, உரங்களுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க மனு

நிலக்கடலை, உரங்களுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க மனு

நிலக்கடலை, உரங்களுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க மனு

1


ADDED : ஜன 31, 2025 12:23 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வறுத்த நிலக்கடலை, உரங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வலியுறுத்தி, டில்லியில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடுதல் செயலரிடம், தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலர் சாய் சுப்ரமணியன், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

மனுவில் கூறப்பட்டுஇருப்பதாவது:

வறுத்த நிலக்கடலைக்கு, 12 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாகவும்; உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து, நுண்ணுாட்ட உரங்களுக்கு ஒரே மாதிரியாக, 5 சதவீதமாக ஜி.எஸ்.டி.,யும் விதிக்க வேண்டும்.

உலர் பழங்களுக்கு, 12 சதவீதம் வரை உள்ள ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ரஸ்க், புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, ஈர இட்லி, தோசை மாவு ஆகியவற்றுக்கு, 5 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும். வெண்ணெய்க்கு 12 சதவீதம், பிஸ்கட்டுக்கு 18 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

வற்றல் வகைகளுக்கு, 5 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்வதுடன், 'நம்கின்ஸ்' எனப்படும் கார வகைகளுக்கு, 12 சதவீதமாக உள்ள ஜி.எஸ்.டி.,யை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us