ADDED : பிப் 06, 2024 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மருந்துகளின் ஏற்றுமதி 8.20 சதவீத வளர்ச்சி கண்டு, கிட்டத்தட்ட 1.68 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் இதே மதிப்பீட்டு காலத்தில், கிட்டத்தட்ட 1.50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கிட்டத்தட்ட 20,631 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன், டிசம்பர் அதிகபட்ச மாதாந்திர மருந்து ஏற்றுமதியை கண்டது.
அதேபோல் மருந்து இறக்குமதி, மதிப்பீட்டு காலத்தில், 1.83 சதவீதம் வளர்ச்சி கண்டு, கிட்டத்தட்ட 51,792 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த டிசம்பரில் இறக்குமதி, 6,308 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய மருந்து ஏற்றுமதியாளராக அமெரிக்கா உள்ளது.