'பால் வணிகத்தில் நுழைய முயற்சித்தால் ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் கிடையாது' ஐரோப்பிய யூனியனிடம் பியுஷ் கோயல் திட்டவட்டம்
'பால் வணிகத்தில் நுழைய முயற்சித்தால் ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் கிடையாது' ஐரோப்பிய யூனியனிடம் பியுஷ் கோயல் திட்டவட்டம்
ADDED : அக் 26, 2024 03:49 AM

புதுடில்லி:இந்தியாவின் பால்வளத் துறையில் பங்கேற்க ஐரோப்பிய யூனியன் அனுமதி கேட்டு வலியுறுத்தினால், அந்த அமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாது என, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் நடத்தும் ஆசிய பசிபிக் மாநாட்டில் பங்கேற்ற பின், அமைச்சர் தெரிவித்ததாவது:
ஐரோப்பிய யூனியனில் மொத்தம் 27 நாடுகள் உள்ளன. அதேபோல், இந்தியாவில் 27 மாநிலங்கள் உள்ளன.
ஒவ்வொன்றுக்கும் உள்ள உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட்டால் மிகவும் கவுரவமாகவும், பாராட்டத்தக்க வகையிலும், வேகமாகவும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகியவை இந்தியாவின் உணர்வுகளுக்கும், இந்தியா அந்நாடுகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்ததால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இந்தியாவில் அதிக ஆப்பிள் உற்பத்தி செய்யும் மாநிலம், ஆப்பிள் சந்தையில் பிற நாடுகளை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தினால், அதை மத்திய அரசு ஏற்று தான் ஆக வேண்டும். எடுத்துக்காட்டாக, பால்வளத் துறையில் அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. அனுமதித்தே ஆக வேண்டும் என ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தினால், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செயல்படுத்தப்படாது.
இவ்வாறு பியுஷ் கோயல் தெரிவித்தார்.