வாகன உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும்
வாகன உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும்
ADDED : செப் 29, 2025 11:16 PM

புதுடில்லி : வாகன உற்பத்தியை அதிகரிப்பதற்கான வரையறையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள், இது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, 2.5 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை, 2030க்குள் இரு மடங்காக்கி 5 கோடியாக அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. 2047க்குள், இதை 8 மடங்காக அதிகரித்து, 20 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன், மின்சார, சி.என்.ஜி., உள்ளிட்ட பசுமை மாற்று எரிபொருள் தொடர்பான வாகனங்களை உற்பத்தி செய்ய அதிக கவனம் செலுத்தப்படும் என கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களை தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றாலும், பசுமை வாகனங்கள் அதிகரிக்கும் நிலையில், அதன் சந்தை பங்கு குறையும் வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் வினியோக தொடரை பலப்படுத்த அதிக முக்கியத்துவம் தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஏற்றுமதியை 2030க்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மொத்த ஏற்றுமதியில், பயணியர் காரின் பங்கு, 30 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நவீன உற்பத்தி, தொழில்நுட்ப இடைவெளி, சார்ஜிங் கட்டமைப்புகள், ஆதரவான கொள்கை மற்றும் ஊக்கத்தொகை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளன.