ADDED : அக் 09, 2025 12:39 AM

புதுடில்லி:பொதுத்துறை வங்கிகள் சிலவற்றில் தனது பங்கின் ஒரு பகுதியை இந்த நிதியாண்டில் விற்பதன் வாயிலாக, கணிசமான நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் சிந்து வங்கி ஆகியவற்றில் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஆபர் பார் சேல் முறையில் நடப்பு நிதியாண்டிலேயே இதை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்கட்டமாக, டிசம்பருக்குள் இரண்டு வங்கிகளின் பங்கு விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின், 100 சதவீத பங்குகளில் 25 சதவீதம், பொதுமக்கள் வசம் இருக்க வேண்டும் என, செபியின் சமீபத்திய விதிமுறை உள்ளது.
அதை நிறைவு செய்யும் வகையில், பொதுத் துறை நிறுவனங்களில் தனது பங்குகளை 75 சதவீதமாக குறைப்பதில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.