துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் 'சிப்காட்' உதவியில் அமைக்க திட்டம்
துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் 'சிப்காட்' உதவியில் அமைக்க திட்டம்
UPDATED : ஆக 23, 2025 10:19 PM
ADDED : ஆக 23, 2025 10:14 PM

சென்னை:தமிழகத்தில் கப்பல் கட்டும் துறையில் முதலீட்டை ஈர்ப்பதுடன், புதிய வேலைவாய்ப்பை உருவாக்க, துாத்துக்குடியில் கப்பல் கட்டும் தளத்தை, 'சிப்காட்' நிறுவனம் வாயிலாக அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முன்னணி பொது அல்லது தனியார் துறையை சேர்ந்த கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம், செயல்படுத்தப்பட உள்ளது. நம்நாட்டில் ஆந்திராவில் விசாகப்பட்டினம், கேரளாவில் கொச்சி, மஹாராஷ்டிராவில் மும்பை, மேற்கு வங்கத்தில் கொல்கட்டா ஆகிய இடங்களில், பெரியளவில் கப்பல் கட்டும் தளங்கள் உள்ளன.
இதையடுத்து, தமிழகத்திலும் கப்பல் கட்டும் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில், தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது.
இதற்காக, துாத்துக்குடியில், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் வாயிலாக, கப்பல் கட்டும் தளத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவின் கப்பல் கட்டும் துறையின் சந்தை மதிப்பு : ரூ. 9,200 கோடி
உலகளாவிய கப்பல் கட்டும் சந்தையின் மதிப்பு ரூ.13 லட்சம் கோடி
உலகளவில் கப்பல் கட்டும் சந்தையில் நாட்டின் பங்கு, 2 சதவீதத்துக்கும் குறைவு
சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கப்பல் கட்டும் தொழிலில் முன்னணி.