ADDED : ஏப் 19, 2025 10:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்தியா, முதல்முறை யாக மாதுளம் பழங்களை, கடல் வழியாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாரம்பரியமாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம் வாயிலாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. 14 டன்கள் கொண்ட 4,620 பெட்டி மாதுளம் பழங்கள் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது இந்தியாவின் பழ ஏற்றுமதியில் மைல்கல் என அமைச்சகம் தெரிவித்தது.