ஆக்ராவில் பெரு நிறுவனத்தின் உருளைக்கிழங்கு ஆய்வு மையம்
ஆக்ராவில் பெரு நிறுவனத்தின் உருளைக்கிழங்கு ஆய்வு மையம்
ADDED : டிச 03, 2024 11:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரு நாட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் 'இன்டர்நேஷனல் பொடேட்டோ சென்டர்' ஆராய்ச்சி நிறுவனம், இந்தியாவில் அதன் முதல் கிளையை உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் அமைக்க உள்ளது.
இந்த மையம், 10 ஏக்கர் நிலத்தில் 120 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருப்பதாக உ.பி., அரசு தெரிவித்துள்ளது.
இந்த மையம், விவசாயிகளுக்கு உயர் ரக உருளை விதைகளை வழங்கும் என்றும்; இதனால் விளைச்சலும், விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு மேம்பட்ட உருளை சாகுபடி தொழில்நுட்பங்களும் கற்றுத் தரப்பட இருக்கின்றன. நாட்டிலேயே அதிகமாக உருளைக்கிழக்கு விளைவிக்கும் மாநிலமாக உத்தர பிரதேசம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.