ADDED : ஆக 09, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்:சீன நிறுவனங்களுடனான தொடர்பை சுட்டிக்காட்டி, இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து லிப் பு டான் விலக வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல்லின் புதிய தலைமை செயல் அதிகாரியாக, லிப் பு டான் கடந்த மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சீன அரசு மற்றும் ராணுவத்துக்கு தொடர்புடைய சிப் தயாரிப்பு நிறுவனங்களில் லிப் பு டான் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், “லிப் பு டான் உடனடியாக தனது பொறுப்பிலிருந்து விலகுவதைத் தவிர, இந்த பிரச்னைக்கு வேறு தீர்வு கிடையாது” என, தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

