ADDED : ஏப் 24, 2025 01:01 AM

புதுடில்லி:நாட்டின் தனியார் துறை வளர்ச்சி, எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இம்மாதம் அதிகரித்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதந்தோறும் வெளியிடப்படும் பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டில், இம்மாதத்துக்கான தரவுகளில் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு 60 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு, இதுவே அதிகபட்ச கூட்டு வளர்ச்சியாகும். கடந்த மாதம் இது 59.50 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்தால் வளர்ச்சியைக் குறிக்கும்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ள நிலையில், தயாரிப்பு துறை நிறுவனங்களின் வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
சேவைகள் துறை நிறுவனங்களின் புதிய ஆர்டர்களும் இம்மாதம் அதிகரித்துள்ளன.