sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பயண கடன் வசதியை நாடுவதன் சாதகங்களும், பாதகங்களும்!

/

பயண கடன் வசதியை நாடுவதன் சாதகங்களும், பாதகங்களும்!

பயண கடன் வசதியை நாடுவதன் சாதகங்களும், பாதகங்களும்!

பயண கடன் வசதியை நாடுவதன் சாதகங்களும், பாதகங்களும்!


ADDED : டிச 09, 2024 12:19 AM

Google News

ADDED : டிச 09, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுற்றுலா பயணங்களை, குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதை பயண கடன் வசதி எளிதாக்குகிறது. நிதி தேவை காரணமாக விரும்பிய சுற்றுலா பயணத்தை தள்ளிப்போடாமல் உடனடியாக மேற்கொள்ள இந்த கடன் வசதி கைகொடுக்கிறது. அதற்கேற்ப வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பயண கடன் வசதியை அளிக்கின்றன.

எளிய கடன் வசதி என்றாலும், சாதகமான,பாதகமான அம்சங்களும் இருக்கின்றன. இந்த கடன் வசதியை நாடும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

தனிநபர் கடன்:


பயண கடன், ஒரு வகையான தனிநபர் கடன் தான். இதற்கான வட்டி விகிதம் சற்று குறைவானது. சம்பளம் பெறும் ஊழியர்கள், தொழில்முறை பணியாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் குறுகியகால கடனாக இது அமைகிறது.

கடன் தகுதி:


பொதுவாக, 21 வயது முதல் 60 வயது வரை உள்ள சம்பளம் பெறும் ஊழியர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு அதிகம் இருக்கலாம். குறைந்தது இரண்டு ஆண்டு பணி அனுபவம் தேவைப்படும். கடனுக்கான குறைந்தபட்ச வருமான வரம்பும் உண்டு.

வட்டி விகிதம்:


தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் அதிகம். பயண கடனுக்கான வட்டி விகிதம், ஆண்டுக்கு 10.5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அமையலாம். இதில் கிரெடிட் ஸ்கோரும் முக்கிய பங்கு வகிக்கிறது. அடையாள அட்டை, வருமான நிரூபணம், ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம்.

கடன் தொகை:


30,000 ரூபாயில் இருந்து பல லட்சம் வரை பயண கடன் பெறலாம். மற்ற கடன்கள் போல மாதத்தவணையில் கடனை திரும்பி செலுத்த வேண்டும். கடனுக்கான காலம் ஒராண்டு முதல் ஆறாண்டு வரை அமையலாம். சில நிதி நிறுவனங்கள் மூன்று மாத கால கடன் கூட வழங்குகின்றன.

எப்போது நாடலாம்?


பொதுவாக தனிநபர் கடனை விட, பயண கடன் வட்டி விகிதம் குறைவு என்றாலும், செயல்முறை கட்டணம் போன்றவை பொருந்தும். இந்த தொகை மீது ஜி.எஸ்.டி., உண்டு. சரியான திட்டமிடலோடு, திருப்பி செலுத்தும் வசதியை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.






      Dinamalar
      Follow us