அப்பளம், பொம்மை தொழில்களுக்கு ரூ.20 கோடியில் பொது வசதி மையம்
அப்பளம், பொம்மை தொழில்களுக்கு ரூ.20 கோடியில் பொது வசதி மையம்
ADDED : நவ 20, 2025 12:06 AM

சென்னை;மதுரையில் அப்பளம், காஞ்சிபுரத்தில் பொம்மை, விருதுநகரில் மருத்துவ துணி தயாரிப்பது உள்ளிட்ட, 11 தொழில்களுக்கு, 20 கோடி ரூபாயில் பொது வசதி மையங்களை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாகன உதிரிபாகங்கள், கைவினை பொருட்கள் உட்பட பல பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
இந்நிறுவனங்கள், குறைந்த முதலீட்டில் துவக்கப்பட்டதால், நவீன இயந்திரங்கள் போன்றவற்றை வாங்க சிரமப்படுகின்றன.
எனவே, ஒரு இடத்தில் ஒரே தொழிலில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் பயன்பெறுவதற்காக, பொது வசதி மையங்களை தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் தொழில் வணிக ஆணையரகமும், 'சிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமும் அமைக்க உதவுகின்றன.
இயற்கையாக அமைய பெற்றிருக்கும் தொழில்களின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உள் கட்டமைப்பு, ஒருங்கிணைப்பு வசதி, பொது வசதி மையங்களை, தொழில் வணிக ஆணையரகம் அமைக்க உள்ளது.

