'சிட்கோ' குறித்த புகார்களுக்கு மின்னஞ்சல் முகவரி வெளியீடு
'சிட்கோ' குறித்த புகார்களுக்கு மின்னஞ்சல் முகவரி வெளியீடு
ADDED : பிப் 15, 2024 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழிற்பேட்டைகளை அமைக்கிறது. அவற்றில் உள்ள தொழில்மனைகள், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.
மாநிலம் முழுதும் உள்ள சிட்கோவின், 130 தொழிற்பேட்டைகளில், பல நுாறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. தொழிற்பேட்டைகளில் சாலைகள் சேதம், மழைநீர் தேங்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் காணப்படுகின்றன.
எனவே, தொழிற்பேட்டை சங்கத்தினரும், தொழில்முனைவோரும், 'grievanceredressal@tansidco.org' என்ற மின்னஞ்சல் முகவரியில், தொழிற்பேட்டைகளில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து தெரிவிக்குமாறு சிட்கோ அறிவுறுத்தியுள்ளது.