ADDED : மார் 12, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி, 'குவால்காம்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரிஸ்டியானோ அமானை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, இந்தியாவின் செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் குறித்து, இருவரும் விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி செமிகண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான குவால்காம், சென்னை ராமானுஜன் ஐ.டி., சிட்டியில், புதிதாக வடிவமைப்பு மையம் அமைத்துள்ளது.
இந்த புதிய வடிவமைப்பு மையத்தை, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரிஸ்டியானோ அமான், நாளை மறுநாள் திறந்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மையம் வாயிலாக, 1,600 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

