ADDED : ஜன 22, 2025 12:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் உள்ள, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழில் பூங்காவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார் தொழிற்சாலை அமைக்க உள்ளது. அங்கு, 'ஜாகுவார் லேண்ட் ரோவர்' கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் கட்டுமான பணிக்கு முதல்வர் ஸ்டாலின், 2024 செப்டம்பர் 28ல் அடிக்கல் நாட்டினார்.
ஆலைக்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில், 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. முதல் கட்டமாக, 914 கோடி ரூபாய் முதலீட்டில், 470 ஏக்கரில் கார் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு, தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.
தற்போது ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியுள்ளது. செயல்பட உள்ள ஆலையால், முதல் கட்டமாக 1,650 வேலைவாய்ப்புகள் உருவாகும்.