ADDED : செப் 28, 2025 07:43 PM

இந்திய இல்லங்களின் நிதிச் சொத்துகள் கடந்த ஆண்டு 14.5 சதவீதம் அதிகரித்திருப்பதும், இந்த பிரிவில் உலக அளவில் வேகமாக வளரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளில் உள்ள இல்லங்களின் செல்வ வளத்தை ஆய்வு செய்து, அலையன்ஸ் குளோபல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியர்களின் தனிநபர் சராசரி நிதிச் சொத்துகள் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு இந்திய இல்லங்களின் நிதிச் சொத்துகள் 14.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை சார்ந்த நிதிச் சொத்துகள் கடந்த ஆண்டு 29 சதவீத அளவு வளர்ச்சி கண்டுள்ளது. காப்பீடு மற்றும் பென்ஷன் 20 சதவீத அளவு வளர்ச்சி கண்டுள்ளது. வைப்பு நிதி முதலீடு 54 சதவீதமாக உள்ளது.
பணவீக்கத்தை கணக்கில் கொண்ட பிறகு இந்தியர்களின் நிதிச்சொத்துகள் 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் நடுத்தர வர்க்கத்தின் ஆற்றல் இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் நிதிச் சொத்துக்கள் உருவாக்கத்தில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. சீனா அடுத்த இடத்தில் உள்ளது.