அரிய வகை காந்தம் பற்றாக்குறை ஆப்பிள் ஏர்பாட்ஸ் உற்பத்தி பாதிப்பு
அரிய வகை காந்தம் பற்றாக்குறை ஆப்பிள் ஏர்பாட்ஸ் உற்பத்தி பாதிப்பு
ADDED : ஜூலை 22, 2025 11:11 PM

ஹைதராபாத்:அரிய வகை காந்தங்கள் பற்றாக்குறையால், பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஹைதராபாத் ஆலையில், ஆப்பிள் ஏர்பாட்ஸ் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்ததாரரான தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், கடந்தாண்டு ஏப்ரல் முதல் ஹைதராபாத் ஆலையில் ஏர்பாட்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதில், அரிய வகை காந்தங்களான நியோடைமியம், டைஸ்புரோசியம் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், முக்கிய ஏற்றுமதியாளரான சீனா, சமீபத்தில் அரிய வகை காந்தங்கள் ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால், இந்தியா மட்டுமின்றி; பல்வேறு நாடுகளின் வாகனங்கள், மின்னணு பொருட்களின் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் பாக்ஸ்கான் நிறுவனம் வெளியுறவு அமைச்சகம் மற்றும் சீன துாதரகம் ஆகியவற்றிடமிருந்து இறுதி பயனர் சான்றிதழ் பெற்று, சீன அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன், சீன நிறுவனங்கள் இந்தியாவுக்கு அரிய வகை காந்தங்கள் ஏற்றுமதியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

