தனி நபர்களின் சேவை ஏற்றுமதி விதிகளை தளர்த்தியது ஆர்.பி.ஐ.,
தனி நபர்களின் சேவை ஏற்றுமதி விதிகளை தளர்த்தியது ஆர்.பி.ஐ.,
UPDATED : நவ 04, 2026 12:00 AM
ADDED : நவ 03, 2026 10:47 PM

புதுடில்லி: வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி, வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்கு, ஏற்றுமதி தொடர்பான விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.
சேவை ஏற்றுமதி குறித்து தகவல் தெரிவிக்கும் புதிய நடைமுறையில் குழப்பங்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, தனிநபர்கள் ஏற்றுமதி இனி அறிவிப்பு படிவத்தை தனியாக சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் படி, வெளிநாடுகளுக்கு சேவைகளை ஏற்றுமதி செய்யும் இந்தியர்கள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் தொடர்பான தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட வங்கியிடம் வழங்கினால், அவர்கள் ஏற்றுமதி அறிவிப்பு படிவத்தை சமர்ப்பித்ததாகவே கருதப்படுவர்.
இதன் வாயிலாக வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் சுயதொழில் ஆலோசகர்கள் உள்ளிட்ட தனிநபர்கள், பணம் பெறுவதற்கான விவரங்களை வங்கியிடம் அளித்தால் மட்டும் போதுமானது. இந்த புதிய தளர்வு, அக்., 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
