வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கொண்டு வர ஆர்.பி.ஐ., மும்முரம் கடந்த 6 மாதங்களில் 64 டன் வந்து சேர்ந்தது
வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கொண்டு வர ஆர்.பி.ஐ., மும்முரம் கடந்த 6 மாதங்களில் 64 டன் வந்து சேர்ந்தது
ADDED : அக் 30, 2025 03:04 AM

புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், வெளிநாடுகளில் இருந்து 64 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி, இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால், உள்நாட்டில் ஆர்.பி.ஐ.,யிடம் உள்ள தங்கம் 575.80 டன்னாக அதிகரித்து உள்ளது.
கடந்த செப்டம்பர் முடிவில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஆர்.பி.ஐ., வசமுள்ள மொத்த தங்கத்தின் கையிருப்பு 880.80 டன். இதில், 290.30 டன் தங்கம், பேங்க் ஆப் இங்கிலாந்து மற்றும் பேங்க் ஆப் இன்டர்நேஷனல் செட்டில்மென்ட்ஸ் வசமும், 14 டன் தங்கம், தங்க முதலீட்டு திட்டங்களிலும் உள்ளன.
வெளிநாடுகளில் பாதுகாக்கப்படும் தங்கத்தை திரும்ப பெறும் நடவடிக்கையை ஆர்.பி.ஐ., கடந்த 2023 ஆரம்பத்தில் துவங்கியது. உக்ரைன் போர், ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியது ஆகிய காரணங்களை கூறி, சர்வதேச நிதி அமைப்புகளில் இருந்த ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளின் அன்னிய செலாவணி கையிருப்புகளை, மேற்கத்திய அரசுகள் முடக்கின.
புவிசார் அரசியல் அழுத்தத்தை பயன்படுத்தி, வெளிநாடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சொத்துகளின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்த நிலையில், ஆர்.பி.ஐ., நம் நாட்டின் தங்கத்தை திரும்ப கொண்டு வரும் பணியை துவங்கியது.
கடந்த 2023 மார்ச் முதல், ஆர்.பி.ஐ., மொத்தம் 274 டன் தங்கத்தை, வெளிநாடுகளில் இருந்து தாயகம் கொண்டு வந்துள்ளது. இந்தியாவின் தங்க கையிருப்பின் மதிப்பு, உலகளாவிய சந்தை போக்கு காரணமாக முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்வு கண்டுள்ளது.
அமெரிக்க டாலர் மற்றும் பிற சொத்துக்களை சார்ந்திருப்பதை குறைத்து, உலகளவில் தங்கத்தை அதிகமாக வாங்கி குவிப்பதில் ஆர்.பி.ஐ., முன்னிலை வகிக்கிறது. உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டம் தொடரும்பட்சத்தில், வெளிநாடுகளில் பாதுகாத்து வைத்திருக்கும் சொத்துகள் மீது நம்பிக்கை வைப்பதை விட, கையில் இருக்கும் தங்கத்தை பயன்படுத்தும் அணுகுமுறையை ஆர்.பி.ஐ., கடைப்பிடிக்கும் என கூறப்படுகிறது.
நாட்டின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பில், கடந்தாண்டு 4 சதவீதமாக இருந்த தங்கம், தற்போது 9 சதவீதமாக உயர்வு

