ADDED : ஜூலை 08, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : ராணிப்பேட்டை பனப்பாக்கத்தில், 1,200 ஏக்கரிலும்; திருநெல்வேலி கங்கைகொண்டான் - 2ல், 625 ஏக்கரிலும் தொழில் பூங்காக்கள் உள்ளன. இந்த இரு பூங்காக்களிலும் தற்போது, தயார்நிலை தொழிற்கூடங்களை அமைக்க சிப்காட் முடிவு செய்துள்ளது.
இதன்படி, பனப்பாக்கத்தில் 50 ஏக்கரிலும்; கங்கைகொண்டான் - 2ல் 27 ஏக்கரிலும், பி.பி.பி., மாடல் எனப்படும் பொது - தனியார் கூட்டு முயற்சியில், தயார்நிலை தொழிற்கூடங்களை கட்டுவதற்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, சிப்காட் டெண்டர் கோரியுள்ளது.
தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதும், சிப்காட் வழங்கும் இடத்தில் அந்நிறுவனம், தயார்நிலை தொழிற்கூடங்களை சொந்த செலவில் கட்டி, 45 ஆண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். பின், சிப்காட்டிடம் ஒப்படைக்க வேண்டும்.