ADDED : நவ 14, 2024 11:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம் உள்ளிட்ட இடங்களில், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்திற்கு, தொழில் பூங்காக்கள் உள்ளன. அவற்றில் பெரிய நிறுவனங்களின் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம், வல்லம் வடகாலில், 1.30 லட்சம் சதுர அடியில், உடனே தொழில் துவங்க வசதியாக, 'பிளக் அண்டு பிளே' எனப்படும் தயார் நிலை தொழில்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தனியாருடன் இணைந்து, தொழில்கூடம் அமைக்க தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டதில், இரு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிப்காட்டில் தயார் நிலை தொழில் கூடம் அமைக்க, இரு நிறுவனங்கள் இடையே போட்டி உள்ளது; தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, விரைவாக பணிகள் துவங்கப்படும்' என்றார்.