ADDED : செப் 06, 2025 11:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப ங்கு முதலீடுகளில், 15 லட்சம் ரூபாய் வரையிலான குறைந்த மதிப்பு செட்டில்மென்ட்களுக்கு, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் நடைமுறையை எளிதாக்கவும், விரைவுபடுத்தவும் அரசு அமைத்த உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.
ஐ.இ.பி.எப்.ஏ., எனும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு பண்டு ஆணையம், மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
இந்த ஆணையத்துக்கு, ஆவணமாக வைத்திருக்கும் பங்குகளுக்கு 5 லட்சம் ரூபாய் வரையும்; டிமேட் கணக்குகளில் வைத்திருக்கும் பங்குகளுக்கு 15 லட்சம் ரூபாயும்; டிவிடெண்டுகளுக்கு 10,000 ரூபாய் வரையிலும் உரிமை கோருவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.