ADDED : நவ 13, 2024 12:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'ரிலையன்ஸ் எனர்ஜீஸ்' நிறுவனம், ஆந்திர பிரதேச மாநிலத்தில் 500 பயோகாஸ் ஆலைகளை அமைக்க, 65,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலைகள் வாயிலாக, 2.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆலைக்கும் 130 கோடி ரூபாய் என, மொத்தம் 500 ஆலைகள் அமைக்கப்பட உள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.