ADDED : ஜூலை 26, 2026 02:21 AM

சென்னை: நவீன இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய தொழில் கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறையினருடன் சென்னை வழிகாட்டி நிறுவனத்தில், தொழில் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இதில் தொழில் துறை செயலர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப், பல்வேறு தொழில் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச் செயலர் திருக்குமரன் கூறியதாவது:
ஜவுளி துறைக்கு ஆட்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, திருப்பூரில் பணியாளர்கள் தங்கும் விடுதி கட்டுவதற்கான கட்டுமான செலவில், மத்திய, மாநில அரசுகள், 40 சதவீதம் மானியம் வழங்குமாறு, அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் நவீன இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்குமாறு தெரிவிக்கப்படட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
