தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : ஜூலை 26, 2026 02:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 02:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூ.12,000 கோடி திரட்ட என்.டி.பி.சி., வாரியம் ஒப்புதல்

பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., பங்குகளாக மாற்ற முடியாத கடனீட்டு பத்திரங்கள் வாயிலாக 12,000 கோடி ரூபாய் வரை திரட்டுவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நிறுவனத்தின் புதிய திட்ட விரிவாக்கம் மற்றும் மின் வினியோக கடன் கட்டமைப்பை பலப்படுத்தும் நோக்கில் இது மேற்கொள்ளப்படுகிறது.

வங்கி சேவைகளை வலுப்படுத்த 1,930 பேரை நியமித்த எஸ்.பி.ஐ.,

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது வங்கி செயல்பாடுகள் மற்றும் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் 1,930 வட்டார அளவிலான அதிகாரிகளை புதிதாக பணியமர்த்திஉள்ளது. 2.45 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களை கொண்டுள்ள பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., இதன் வாயிலாக தங்களின் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஸ்டார் ஹெல்த் பங்குகளை விற்க வெஸ்ட்பிரிட்ஜ் திட்டம்

முதலீட்டு நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனக்குள்ள 40 சதவீத பங்குகளை விற்பனை செய்வது குறித்து நிதி ஆலோசகர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்களின் முதலீட்டு உட்கட்டமைப்பை சீரமைக்கும் நோக்கில் இது பரிசீலிக்கப்படுவதாக தெரிகிறது.



ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி ரூ.30,000 கோடி வருவாய் இலக்கு

ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் நிறுவனம், வரும் ஆறு ஆண்டுகளில் பேட்டரி உதிரிபாகங்கள் வணிகத்தில் 30,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. 100 ஜிகாவாட் கேத்தோடு மற்றும் ஆனோடு உற்பத்தித் திறனை உருவாக்குவதுடன், செமிகண்டக்டர் உற்பத்தியிலும் தங்களின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாபர்ஸ்ட் லைப் பங்கு வாங்கும் பி.என்.பி., பரிபாஸ்

பி.என்.பி., பரிபாஸ் கார்டிப் நிறுவனம், வார்பர்க் பிங்கஸ் அமைப்பிடம் உள்ள இந்தியாபர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை கையகப்படுத்த உள்ளது. இதன் பின், இந்நிறுவனத்தின் பங்குகள் பேங்க் ஆப் பரோடாவிடம் 65 சதவீதமும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவிடம் 9 சதவீதமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us