பாலியெஸ்டர் நுால் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை
பாலியெஸ்டர் நுால் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை
ADDED : ஜூன் 30, 2026 06:45 AM

திருப்பூர்: பாலியெஸ்டர் நுால் இறக்குமதியில் உள்ள தரக்கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாக, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் உறுதியளித்துள்ளார்.
வரும் 2030ம் ஆண்டுக்குள் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியை 10,000 கோடி டாலராக (ரூ.9.45 லட்சம் கோடி) உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த இலக்கை எட்ட, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை மேம்படுத்துவது கட்டாயமாகும். ஆனால், அதற்கான பாலியெஸ்டர் நுால் இறக்குமதி யில் சிக்கல் நீடிக்கிறது.
நம் நாட்டில் பாலியெஸ்டர் நுால் உற்பத்தி போதிய அளவு இல்லாத தால், சீனாவில் இருந்தே அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதற்கிடையே, இந்திய தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, பாலியெஸ்டர் நுால் இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், தேவைக்கேற்ப நுால் இறக்குமதி செய்ய முடிய வில்லை.
பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், “மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நுாலிழை ஆடைகளை உற்பத்தி செய்தால் மட்டுமே, புதிய சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களின் பலன்களை நாம் பெற முடியும். எனவே, மத்திய அரசு சீன நிறுவனங்களுக்கு தனி அங்கீகாரம் வழங்கி, எளிய நடை முறையில் நுால் இறக்குமதி செய்ய ஏ துவாக 'பி.ஐ.எஸ்' தரக்கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்.
திருப்பூர் வந்திருந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்” என்றனர்.
