டிஜிட்டல் வங்கி சேவை விதிகள் கடுமையாக்கும் ரிசர்வ் வங்கி
டிஜிட்டல் வங்கி சேவை விதிகள் கடுமையாக்கும் ரிசர்வ் வங்கி
ADDED : ஜூலை 22, 2025 10:14 PM

மும்பை:டிஜிட்டல் வங்கிச் சேவை விதிமுறைகளை கடுமையாக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்:
வங்கிகள், மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளை தங்களது டிஜிட்டல் தளங்கள் மற்றும் செயலிகளில் விளம்பரப்படுத்தக் கூடாது. ஒரே குழுமத்தைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும், இது பொருந்தும்
வாடிக்கையாளர்களிடம் ஆவணப்பூர்வமான அனுமதி பெற்ற பிறகே, அவர்களுக்கு டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்க வேண்டும். மேலும், டெபிட் கார்டு போன்ற அத்தியாவசிய சேவைகளை பயன்படுத்த, டிஜிட்டல் வங்கி சேவை பயன்பாடு கட்டாயமாக்கப்படக் கூடாது
ஏற்கனவே மொபைல் மற்றும் இணையதள வங்கி சேவை வழங்கி வரும் வங்கிகள், கூடுதலாக டிஜிட்டல் தளங்களை அறிமுகப்படுத்த விரும்பினால், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படும். இடர் மேலாண்மையில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், வங்கியின் மூத்த நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்
தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை, ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தியுள்ள வங்கிகள் மட்டுமே , இருப்பு சரிபார்த்தல், வங்கி ஸ்டேட்மென்ட் பதிவிறக்கம் போன்ற பரிவர்த்தனை அல்லாத இணையதள மற்றும் மொபைல் வ ங்கி சேவைகளை வழங்க முடியும்.
இந்த வரைவு வழிகாட்டுதல்கள் குறித்து, பொதுமக்கள் அடுத்த மாதம் 11ம் தேதி வரை தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.