ADDED : ஆக 13, 2025 02:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி; வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு, துறைமுகம் வாயிலாக சணல் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. உள்நாட்டு சணல் பொருள் தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:
வங்கதேசத்தில் இருந்து பிளீச் செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத சணல், பிற ஜவுளிப் பொருட்கள், நுால் கண்டுகள், கயிறு, ஒயர்கள், சணல் பைகள் ஆகியவற்றை, எந்தவொரு துறைமுகம் வாயிலாகவும் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுகிறது.
மஹாராஷ்டிராவில் உள்ள நவ சேவா துறைமுகம் வாயிலாக மட்டுமே, இப்பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.