UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 11:16 PM

புதுடில்லி: ரூபாய் மதிப்பு சரிவு, வானிலை மாற்றங்கள், போக்குவரத்துச் செலவு உயர்வு உள்ளிட்டவற்றால், ஆசிய சந்தைகளில் விலை மாறுபட்டாலும், இந்தியாவில் அரிசி ஏற்றுமதி விலை கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலான உச்சத்தில் தொடர்ந்து நிலையாக உள்ளது.
இதுகுறித்து வர்த்தகர்கள் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் புழுங்கல் அரிசி டன் 36,864 ரூபாயாகவும், பச்சரிசி டன் 36,959 ரூபாயாகவும் விற்பனையாகிறது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் விலையில் மாற்றமில்லை. போதிய மழை இல்லாததால், நடப்பு ஆண்டில் இந்திய அரிசி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தில், அரிசி விலை டன்னுக்கு 500 ரூபாய் அதிகரித்து 44,460 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், வெள்ளப்பெருக்கால் அரிசி இருப்பு பாதிக்கப்படலாம் என்ற தகவல் கணிப்புகளே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதைய சந்தையில் போதிய அளவு அரிசி இருப்பதால் அங்கு த ட்டுப்பாடு ஏற்படவில்லை.
வியட்நாமில் இதே ரக அரிசி டன் 40,850 ரூபாயாக மாற்றமின்றி தொடர்கிறது. அத்துடன், பிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகள் கொள்முதலை மீண்டும் துவங்காததால் வர்த்தகம் மந்தமாக உள்ளது. கடந் த செப்டம்பர் மாதம் அரிசி ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.3 சதவீதம் சரிந்துள்ளது. வங்கதேசத்தில் எரிபொருள் விலை அதிகரித்து, போக்குவரத்துச் செலவுகள் உயர்ந்ததால் அரிசி விலை சற்று கூடியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
