தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ரூ.15 ஆயிரம் மதிப்பிலான முழு உடல் பரிசோதனை ரூ.5,500க்கு!

ரூ.15 ஆயிரம் மதிப்பிலான முழு உடல் பரிசோதனை ரூ.5,500க்கு!

ரூ.15 ஆயிரம் மதிப்பிலான முழு உடல் பரிசோதனை ரூ.5,500க்கு!


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 04:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோ வை ஏ.ஜி.எஸ். ஹெல்த்கேர் மையம் சார்பில், நவராத்திரி, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, உடல்நலத்தைப் பாதுகாக்கும் வகையில், சிறப்புக் கட்டணத்தில் முழு உடல் பரிசோதனை தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் இனிப்பு, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, உடற்பயிற்சியில் தொய்வு ஏற்படுவது, துாக்க நேரம் மாறுவது உள்ளிட்ட காரணங்களால் உடல்நலம் பாதிக்கப்படலாம். குறிப்பாக, நீரிழிவு, இதய நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளவர்கள் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

இதைக் கருத்தில் கொண்டு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பிடும் வகையில், ரத்தப் பரிசோதனைகள், இதயம் மற்றும் நீரிழிவுக்கான பரிசோதனைகள், கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடு, தைராய்டு, வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பீடுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், எக்கோ உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏ.ஜி.எஸ். ஹெல்த்கேர் மையத்தின் இயக்குனர் டாக்டர் ஆதித்யன் குகன் கூறியதாவது:

வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மூலம் சில உடல்நலப் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியும். எனவே, பண்டிகைக் காலத்திலும் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் அளித்து, ஆரோக்கியத்துடன் பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும்.

ரூ.15,000 மதிப்பிலான இந்த முழு உடல் பரிசோதனைத் தொகுப்பு, சிறப்புச் சலுகையாக ரூ.5,500க்கு வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை டிசம்பர் 31ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். பரிசோதனைத் தொகுப்பு குறித்த விவரங்களுக்கு, 84896 55556, 96594 55556, 99443 33006 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். தொலைபேசி அழைப்பு அல்லது வாட்ஸ்அப் வாயிலாகவும் விவரங்களைப் பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us