தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/வாடிக்கையாளர் நம்பிக்கையில் வளர்ந்த பயணம்

வாடிக்கையாளர் நம்பிக்கையில் வளர்ந்த பயணம்

வாடிக்கையாளர் நம்பிக்கையில் வளர்ந்த பயணம்


UPDATED : அக் 19, 2026 12:00 AM

ADDED : அக் 18, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 12:00 AM ADDED : அக் 18, 2026 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தொ ழில்துறைக்கு ஆற்றல்; முன்னேற்றத்துக்கு உந்துசக்தியாக, புல்லீஸ் சென்டர் வளர்ந்து வருகிறது. புல்லீஸ், வி-பெல்ட்கள், செயின்கள், ஸ்ப்ராக்கெட்கள், பிளம்மர் பிளாக்குகள், பேரிங்ஸ் உள்ளிட்ட தயாரிப்புகளுடன் தொடங்கிய எங்களது பயணம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, ஆதரவு மற்றும் அன்பினால் இன்று முழுமையான பவர் டிரான்ஸ்மிஷன் தீர்வுகளை வழங்கும் தென்னிந்தியாவின் முன்னணி விநியோக நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது.

ABB, Bonfiglioli, Fenner, Galaxy, Shanthi Gears உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகளுடன், மோட்டார்கள், கியர் பாக்ஸ்கள், டேப்பர்லாக் புல்லீஸ், கப்ளிங்ஸ், செயின்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைத் தேவைகளுக்கான தீர்வுகளையும் வழங்கி வருகிறோம். இதுவரை கடந்துவந்த ஒவ்வொரு மைல்கல்லும், பெற்ற விருதுகளும் எங்கள் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளங்களாகும்.

ஆற்றல் சிக்கனம்; நம்பகமான செயல்திறன்



தொழில்துறையின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, ஆற்றல் சிக்கனம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் தீர்வுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

அதிக செயல்திறன் கொண்ட மோட்டார்கள் மற்றும் பயன்பாட்டுக்கு ஏற்ற கியர்பாக்ஸ்களைத் தேர்வு செய்வதன் மூலம், மின் நுகர்வையும் உற்பத்திச் செலவையும் குறைக்க உதவும் தீர்வுகளை வழங்குகிறோம்.

மேலும், அதிக முறுக்குவிசையைத் தாங்கும் மற்றும் கடினமான தொழில்துறைப் பயன்பாடுகளுக்கு ஏற்ற கியர்பாக்ஸ்கள் மூலம், நம்பகமான செயல்பாடு, நீண்ட ஆயுட்காலம் மற்றும் தொடர்ச்சியான உற்பத்தித் திறனை உறுதிப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறோம்.

எங்களது வளர்ச்சிப் பயணத்தில் உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்கள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் நிறுவனம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us