ADDED : நவ 20, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:சென்னையைச் சேர்ந்த நிதி தொழில்நுட்ப 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான 'பே லோக்கல்', ஆரம்ப கட்ட முதலீடாக, கிட்டத்தட்ட 16.80 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.
'யுனிகார்ன் இந்தியா வெஞ்சர்ஸ்' நிறுவனம், இதில் குறிப்பிடத்தக்க அளவு முதலீடு செய்துள்ளது.
கடந்த 2021ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், 'டில்லி மெட்ரோ, இந்திரபிரஸ்தா காஸ், மகாநகர் காஸ்' நிறுவனங்களுக்கு, வாட்ஸாப் செயலியில் பேமென்ட் சேவைகளை வழங்கி வருகிறது.