sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்

/

அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்

அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்

அதிகார பகிர்வு அவசியம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங் எம்பி மாணிக்கம் தாகூர்

29


UPDATED : பிப் 14, 2026 02:05 PM

ADDED : பிப் 14, 2026 12:18 PM

Google News

29

UPDATED : பிப் 14, 2026 02:05 PM ADDED : பிப் 14, 2026 12:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

வரும் சட்டசபை தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதை மேற்கோள் காட்டி, ''அதிகார பகிர்வு அவசியம். ஆட்சி பங்கு எங்கள் உரிமை'' என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு , அதிகாரத்திலும் பங்கு என்று திமுகவை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் விமர்சித்து வருகிறார். அவர், ''கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது , அதிகார பங்கீட்டுக்கான நேரம் இது'' என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறார்.

அவரின் இத்தகைய தொடர் பேச்சுகள், கருத்துகள் திமுக தலைமையை சீண்டுவதாக அமைந்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியை வெளிப்படையாக திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிப்படையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேசுகையில், ''கூட்டணி கட்சிகளை தி.மு.க., அவமதிப்பது கிடையாது. உள்ளதையே எடுத்துச் சொன்னோம். உதயசூரியன் என்றால் தான் மக்கள் ஓட்டளிப்பர். கூட்டணி வேண்டாம் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை.

ஆனால் முதல்வர் ஸ்டாலின், 'ஆட்சியில் பங்கு கிடையாது' என்று தெளிவாக சொல்லி விட்டார். வரும் சட்டசபை தேர்தலில் 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும். 160 தொகுதிகள் வரை வெற்றி பெறும்'' என கூறியிருந்தார்.

ஆட்சியில் பங்கு


இதனை மேற்கோள் காட்டி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: 2021ல் 173ல் போட்டியிட்டு 133 வெற்றி. நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகார பகிர்வு அவசியம்.

ஆட்சி பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். ஆட்சியில் அதிகார பகிர்வு அவசியம் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் மாணிக்கம் தாகூர் தெளிவுப்படுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us