தமிழக முதலீட்டு சூழலை மேம்படுத்த ஜப்பானிடம் ரூ.2,100 கோடி கடன்
தமிழக முதலீட்டு சூழலை மேம்படுத்த ஜப்பானிடம் ரூ.2,100 கோடி கடன்
ADDED : ஏப் 02, 2025 11:48 PM

சென்னை:தமிழகத்தின் முதலீட்டு சூழலை மேம்படுத்துவதற்காக, தமிழக முதலீட்டு ஊக்குவிப்பு திட்டத்துக்கு, ஜே.ஐ.சி.ஏ., எனப்படும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிதியம், 2,106 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது. இதற்கு ஆண்டு வட்டி, 2.45 சதவீதம். 30 ஆண்டுகளில் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டில்லியில் நிதி அமைச்சகம் மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டு றவு நிதியம் இடையில் கையெழுத்தாகியுள்ளது.
கடன் உதவி வாயிலாக, உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு, வளர்ந்து வரும் துறைகளை மேம்படுத்துதல், பசுமை திட்டங்கள், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டு, தமிழகத்தை உலகளாவிய முதலீட்டு மையமாக மேம்படுத்த வேண்டும்.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிதியத்தில் இருந்து கிடைக்கும் கடனைக் கொண்டு, தமிழகத்தில் வளர்ந்து வரும் துறைகளுக்கான நிதியம், பசுமை காலநிலை நிதியம் வாயிலாக, தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்யப்பட உள்ளது.
கடன் தொகை
ரூ.2,100 கோடி
ஆண்டு வட்டி
2.45 சதவீதம்
காலம்
30 ஆண்டுகள்

