42,550 தொழில்முனைவோரின் கடனுக்கு ரூ.735 கோடி கேரன்டி
42,550 தொழில்முனைவோரின் கடனுக்கு ரூ.735 கோடி கேரன்டி
ADDED : ஜன 01, 2025 07:08 AM

சென்னை : தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் வங்கிகளில் கடன் வாங்கியே தொழில்களை துவக்கியுள்ளன. விரிவாக்க திட்டம் போன்றவற்றுக்கு கேட்கப்படும் கடன் முழுதுமாக கிடைப்பதில்லை.
அந்நிறுவனங்களுக்கு, அதிக தொகை கடன் கிடைக்க, தமிழக கடன் உத்தரவாத திட்டத்தை, 2022ல் தமிழக அரசு துவக்கியது. இதற்காக, மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கடன் பிணைய டிரஸ்ட் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
கடன் உத்தரவாத திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு வழங்கப்படும் உத்தரவாதம், 75 சதவீதத்தில் இருந்து, 90 சதவீதமாகவும்; 2 கோடி ரூபாய் வரை கடனுக்கு உத்தரவாதம், 75 சதவீதத்தில் இருந்து, 80 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை, 42,550 தொழில்முனைவோர்களுக்கு, 7,680 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், 735 கோடி ரூபாய் கடன் உத்தரவாதத்தை அரசு ஏற்றுள்ளது.