ரியல் எஸ்டேட் துறையில் குவிந்த ரூ.75,000 கோடி நிறுவன முதலீடு
ரியல் எஸ்டேட் துறையில் குவிந்த ரூ.75,000 கோடி நிறுவன முதலீடு
ADDED : டிச 18, 2024 10:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்தியாவில் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கிடங்குகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதால், நடப்பாண்டில், ரியல் எஸ்டேட் துறையில், நிறுவன முதலீட்டாளர்கள் 75,000 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான 'ஜே.எல்.எல் இந்தியா' வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய ரியல் எஸ்டேட் துறையில், கடந்தாண்டு, நிறுவன முதலீட்டாளர்கள் 49,700 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தனர்.
நடப்பாண்டு, 78 ஒப்பந்தங்கள் வாயிலாக, 75,000 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. இது 51 சதவீதம் அதிகரிப்பாகும்.
வலுவான வளர்ச்சி, நிலையான அரசு மற்றும் பல்வகை முதலீட்டு வாய்ப்புகள் காரணமாக, உலகளாவிய பொருளாதாரத்தில் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

