ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நவம்பரில் குறையும் என எதிர்பார்ப்பு
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி நவம்பரில் குறையும் என எதிர்பார்ப்பு
ADDED : நவ 03, 2025 11:47 PM

சாராம்சம்:: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு நிதி கிடைப்பதை தடுக்கும்: நோக்கில்: விதித்தது. ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கக்கூடாது என: நாடுகளை அமெரிக்கா எச்சரித்தது. எனினும்: எண்ணெய் நிறுவனங்கள் அதிக இறக்குமதியை தொடர்ந்த நிலையில்: புதுடில்லி: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யக்கூடாது என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்த நிலையிலும், செப்டம்பரில் தினமும் 14.30 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை நம் நாட்டின் எண்ணெய் நிறுவனங்கள் இறக்குதி செய்துள்ளன. எனினும், இந்த மாதத்தில் இறக்குமதி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகவல், கேப்ளர் மற்றும் ஆயில் எக்ஸ் ஆகிய கப்பல் போக்குவரத்து குறித்த புள்ளி விபரத்தில் தெரிய வந்திருக்கிறது.
கேப்ளரின் தரவுகளின்படி, செப்டம்பரில் இந்தியா, 14.40 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறது.
ஆயில் எக்ஸ், 14.30 லட்சம் பீப்பாய் இறக்குமதி ஆனதாக மதிப்பிட்டிருக்கிறது. கஜகஸ்தானிலிருந்து செய்யப்பட்ட இறக்குமதியை அது கணக்கில் கொள்ளாததே இதற்கு காரணம். அமெரிக்க நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தன் தேவைக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருக்கிறது.
ரஷ்யா- - உக்ரைன் போரை நிறுத்துவதற்காக, கடந்த மாதம் லுகோயில் மற்றும் ரோஸ்நெப்ட் ஆகிய இரு முக்கிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான தடையை அமெரிக்கா அறிவித்தது.
நவம்பர் 21 வரை இந்த தடை நடப்பில் இருக்கும். அதன் எதிரொலியாக இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இம்மாதத்தில் பின்னடைவு ஏற்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இந்திய இறக்குமதியாளர்கள் தங்கள் ஆர்டர்களை கொஞ்சம் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், உடனடியாக ரொக்கம் கொடுத்து எண்ணெய் வாங்கும் புதிய சந்தைகளை அவர்கள் நாட துவங்கியிருக்கின்றனர்.
முக்கிய எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ், மங்களூர் ரீபைனரீஸ், எச்.பி.சி.எல்-மிட்டல் எனர்ஜி முதலிய நிறுவனங்கள் இம்முடிவை எடுத்த நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களோ, தடைவிதிக்கப்படாத பிற நிறுவனங்களிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது குறித்து யோசித்து வருகின்றன.

