ரூ.3,000 கோடி முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனம் பேச்சு
ரூ.3,000 கோடி முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனம் பேச்சு
ADDED : நவ 03, 2025 11:47 PM

சென்னை:   அமெரிக்காவின் கே.எல்.ஏ., நிறுவனம், சென்னையில், 3,000 கோடி ரூபாய் முதலீட்டில், ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் அமைக்க, தமிழக வழிகாட்டி நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த கே.எல்.ஏ., நிறுவனம், 'செமிகண்டக்டர்' உப கரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி., மெட்ராஸ் ரிசர்ச் பார்க்கில், ஏ.ஐ., மையம், கணினி ஆய்வகத்தை நடத்துகிறது.
தற்போது, சென்னையில், 3,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க கே.எல்.ஏ., நிறுவனம், தமிழக அரசின், 'கைடன்ஸ்' எனப்படும் வழிகாட்டி நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில் முதலீடுகளை ஈர்த்து, அதற்கு ஏற்ப உயர் வேலைவாய்ப்புகளை உருவாக்க கவனம் செலுத்தப்படுகிறது' என்றார்.

