தமிழக 'ஸ்டார்ட்அப்'கள் திரட்டிய ரூ.36,000 கோடி நிதி
தமிழக 'ஸ்டார்ட்அப்'கள் திரட்டிய ரூ.36,000 கோடி நிதி
ADDED : நவ 03, 2025 11:45 PM

சென்னை:  தமிழகத்தில் செயல்படும், 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், 2016 முதல் இதுவரை பல்வேறு முதலீட்டாளர் களிடம் இருந்து, 36,120 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 12,060 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறையின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையிடம் பதிவு செய்துள்ளன.
இந்நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், ஆன்லைன் வணிகம், விண்வெளி உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொழிலில் புதிதாக களமிறங்கி உள்ளதால், புதிய தொழில்நுட்பம், விரிவாக்க நடவடிக்கை உள்ளிட்ட பணிகளுக்கு தேவைப்படும் நிதியை, பல்வேறு முதலீட்டாளர்கள் வாயிலாக திரட்டுகின்றன.
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், 2016 முதல் இந்தாண்டு செப்., வரை, பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து, 36,120 கோடி ரூபாய் நிதியை திரட்டியுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களில், 6,016 பெண்கள் தலைமையின் கீழ் செயல்படுகின்றன. தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்தும், ஆரோக்கிய பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில், பெண்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துவக்குகின்றனர்.
பெண்கள் தலைமையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் 2016 முதல் இந்தாண்டு செப்., வரை, 2,200 கோடி ரூபாய் நிதி திரட்டின

