'சாகிலிட்டி இந்தியா' ஐ.பி.ஓ., பங்கு விலை 28 - 30 ரூபாய்
'சாகிலிட்டி இந்தியா' ஐ.பி.ஓ., பங்கு விலை 28 - 30 ரூபாய்
ADDED : நவ 01, 2024 07:13 AM

புதுடில்லி : 'சாகிலிட்டி இந்தியா' நிறுவனம், புதிய பங்குகளை வெளியிட்டு 2,107 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளதாக அறிவித்துள்ளது. பங்கு ஒன்றின் விலை 28 - 30 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள முதலீட்டாளர்கள், நவம்பர் மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நவம்பர் 12ம் தேதி மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.
வெளியிடப்பட உள்ள பங்குகள் அனைத்துமே பங்குதாரர்களின் பங்குகள் என்பதால், திரட்டப்படவுள்ள தொகை முழுவதும் பங்குதாரர்களுக்கே சென்று சேரும். நிறுவனத்தால் பயன்படுத்தப்படாது.
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சாகிலிட்டி இந்தியா நிறுவனம், மருத்துவத் துறையில் தொழில்நுட்ப ரீதியான சேவைகளை வழங்கி வருகிறது. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்கும் பிற நிறுவனங்களுக்கும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இந்த சேவைகளை பெறும் நோயாளிகளுக்கான கட்டணத்தை செலுத்தும் அந்நாட்டு காப்பீடு நிறுவனங்களுக்கும், சாகிலிட்டி நிறுவனம் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வருகிறது.