ADDED : மார் 18, 2025 07:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தை சேர்ந்த, 'சாய் கிங்ஸ்' நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, டீ விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய, 'பேக்கேஜ்' டீ நிறுவனங்களில் ஒன்றான, 'ஏ.வி.தாமஸ் அண்டு கோ' நிறுவனத்திடம் இருந்து, 24 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டியுள்ளது.
இதுகுறித்து, சாய் கிங்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜகபர் சாதிக் கூறுகையில், ''இந்த முதலீடு, நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், புதிய கடைகளை திறக்கவும், புதுமையான தயாரிப்புகளை உருவாக்கவும், தனித்துவமான டீ அனுபவத்தை நாடு முழுதும் கொண்டு செல்லவும் உதவும்'' என்றார்.