ADDED : ஜன 21, 2024 10:49 AM
புதுடில்லி, ; செயில், என்.எம்.டி.சி., நிறுவனங்களை சேர்ந்த மூன்று இயக்குனர்களை அதிரடியாக இடைநீக்கம் செய்துள்ளதாக உருக்கு அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, என்.எம்.டி.சி., எனும் தேசிய கனிம வளர்ச்சி கழகத்தின் இயக்குனர் ஒருவரையும், 'செயில்' எனும் இந்திய உருக்கு ஆணையத்தின் இரண்டு இயக்குனர்களையும் உருக்கு அமைச்சகம் இடைநீக்கம் செய்துள்ளது.
அத்துடன், செயில் நிறுவனத்தில் நிர்வாக நிலைக்கு கீழ் உள்ள 26 அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடைநீக்க நடவடிக்கை, லோக்பால் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பானது என்றும், இது நிறுவனத்தின் செயல்திறனை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் செயில் தெரிவித்துள்ளது.

