சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான தரத்தை உயர்த்தும் ‘ஸெட்’ சான்றிதழ்
சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான தரத்தை உயர்த்தும் ‘ஸெட்’ சான்றிதழ்
UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 05:16 PM

சிறு, குறு நிறுவனங்கள் வாயிலாக தயாரிக்கப்படும் பொருட்கள் குறைபாடற்றதாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டமே ‘ஸெட்’ ஆகும்.உற்பத்தி செலவை குறைத்து, சர்வதேச தரத்திலான பொருட்களை வினியோகம் செய்ய வழிகாட்டுவதே இதன் நோக்கம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ், எம்.எஸ்.எம்.இ., அமைச்சகம் மற்றும் இந்திய தர கவுன்சில் வாயிலாக வழங்கப்படுகிறது.
சான்றிதழ் நிலைகள்:
*வெண்கலம்: அடிப்படை தரக்கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆரம்பக்கட்ட சான்றிதழ்
*வெள்ளி: மேம்பட்ட உற்பத்தி, தர மேலாண்மைக்கான இரண்டாம் நிலை சான்றிதழ்
*தங்கம்: சர்வதேச தரத்திற்கு இணையான குறைபாடற்ற உற்பத்திக்கான உயர்தர சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
*‘உத்யம்’ பதிவு பெற்ற நிறுவனங்கள் ஸெட் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
*உற்பத்தி முறை, தர கட்டுப்பாடு, தொழிலாளர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு போன்ற அடிப்படை விவரங்களை சமர்ப்பிக்க வேண்ட்டும்
*அதன்பின், தகுதியான சான்றிதழ் நிலையை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்
எவ்வளவு மானியம்?
*குறு நிறுவனங்கள்: 80%
*சிறு நிறுவனங்கள்: 60%
*நடுத்தர நிறுவனங்கள்: 50%
கூடுதல் சலுகைகள்:
*பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் மற்றும் மலைவாழ் பகுதி நிறுவனங்களுக்கு 10% கூடுதல் மானியம் வழங்கப்படும்.
*பாரம்பரிய தொழில்களுக்கான ‘ஸ்பூர்த்தி’ அல்லது ‘எம்.எஸ்.இ.சி.டி.பி.,’ திட்ட நிறுவனங்களுக்கு 5% கூடுதல் மானியம் கிடைக்கும்.
*நிறுவனங்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். இது ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
*சலுகைகளைப் பெற தனித்தனியாக விண்ணப்பிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் தற்போதைய நிலவரம்:
பதிவு செய்த நிறுவனங்கள்: 10,50,027
வழங்கப்பட்ட மானியம்: ரூ.1,046.82 கோடி
வெண்கலம் சான்றிதழ் பெற்றவர்கள்: 7,47,131
வெள்ளி சான்றிதழ்: 9,698
தங்க சான்றிதழ்: 5,741
