உள்ளடக்கத்திற்கு செல்ல

'எம்.பிரிட்ஜ்' நாணயத்திலிருந்து வெளியேறுகிறது சவுதி அரேபியா
'எம்.பிரிட்ஜ்' நாணயத்திலிருந்து வெளியேறுகிறது சவுதி அரேபியா
ADDED : செப் 21, 2026 03:52 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: சீனா முக்கியப் பங்கேற்பாளராக விளங்கும் 'எம்.பிரிட்ஜ்' எனும் எல்லை தாண்டிய டிஜிட்டல் செலாவணி அமைப்பில் இருந்து சவுதி அரேபியா வெளியேறியுள்ளதாக பத்திரிகை செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த 2024ல் சவுதி அரேபியா 'எம்.பிரிட்ஜ்' திட்டத்தில் முழுமையான பங்கேற்பாளராக இணைந்தது. இத்திட்டம் முதலில் சர்வதேச தீர்வு வங்கி, ஹாங்காங் நாணய ஆணையம், தாய்லாந்து வங்கி, சீன மக்கள் வங்கியின் டிஜிட்டல் நாணய நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கி ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. திட்டமிட்ட சோதனைகள் நிறைவடைந்ததால் சவுதி அரேபியா இதில் இருந்து விலகியுள்ளதாகவும், இந்த முடிவை அமெரிக்காவின் அழுத்தத்துடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது சரியாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
