தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சிறு நிறுவனங்களை கையகப்படுத்த டைட்டன் திட்டம்

 சிறு நிறுவனங்களை கையகப்படுத்த டைட்டன் திட்டம்

 சிறு நிறுவனங்களை கையகப்படுத்த டைட்டன் திட்டம்


ADDED : செப் 21, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 03:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கடிகார தயாரிப்பு நிறுவனமான 'டைட்டன்', தனது வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறிய கடிகார நிறுவனங்களைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இது குறித்து டைட்டன் நிறுவனத்தின் முதன்மை சந்தைப்படுத்தல் அதிகாரி ரஞ்சனி கிருஷ்ணசாமி கூறியதாவது:

இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் தேவை வலுவாக உள்ளது. நீண்ட கால வளர்ச்சி இலக்குகளுக்கு உதவும் வகையில், வளர்ந்து வரும் சிறிய கடிகார நிறுவனங்களில் முதலீடு செய்வது மற்றும் கையகப்படுத்த தயாராக உள்ளோம். நகைப் பிரிவில் 'கேரட்லேன்' போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்தது போல, கடிகாரப் பிரிவிலும் தக்க வாய்ப்புகள் அமையும் போது இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது 25 ஆயிரம் ரூபாய்க்குப் மேற்பட்ட பிரீமியம் ரகக் கடிகாரங்களின் விற்பனை இரட்டிப்பு வேகத்தில் வளர்ந்து வருகிறது. அதேவேளையில் 1,000 ரூபாய்க்கு உட்பட்ட கடிகாரங்களின் தேவையில் தேக்கம் காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us