மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்: அரசுக்கு 'நிடி ஆயோக்' பரிந்துரை
மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள்: அரசுக்கு 'நிடி ஆயோக்' பரிந்துரை
ADDED : பிப் 20, 2024 12:49 AM

புதுடில்லி:வரி சீர்திருத்தங்கள், கட்டாய சேமிப்பு திட்டம், முதியோர்களுக்கான வீட்டு வசதி திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த வேண்டும் என, நிடி ஆயோக் வலியுறுத்திஉள்ளது.
வருகிற 2050ம் ஆண்டுக்குள், நாட்டின் மொத்த மக்கள் தொகையில், மூத்த குடிமக்களின் எண்ணிக்கை, 19.50 சதவீதத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.
மாறுபடும் வட்டி விகிதம்
இதையடுத்து வரி சீர்திருத்தங்கள், கட்டாய சேமிப்பு திட்டம் மற்றும் முதியோர்களுக்கான வீட்டு திட்டம், சேவைகளை மூத்த குடிமக்கள் எளிதில் அணுகவதற்கென அவர்களுக்கான தேசிய இணையதளம் உருவாக்குவது உள்ளிட்டவற்றை அரசு செயல்படுத்த வேண்டும் என, நிடி ஆயோக் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவில் சமூக பாதுகாப்பு கட்டமைப்புகள் குறைவாக இருப்பதால், பெரும்பாலான முதியவர்கள் தங்களுடைய சேமிப்பில் இருந்து கிடைக்கும் வருமானத்தையே நம்பியுள்ளனர்.
மாறுபடும் வட்டி விகிதங்களினால் அவர்கள் வருமானம் பாதிப்படைகிறது. சில நேரங்களில் வாழ்வாதரத்திற்கும் கீழே சென்று விடுகிறது.
எனவே, மூத்த குடிமக்களின் வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு, சாத்தியமான அடிப்படை விகிதத்தை நிர்ணயிக்க, ஒழுங்குமுறை அமைப்பு ஒன்று தேவைப்படுகிறது. வயதான பெண்களுக்கு, அவர்களின் நிதி நலனை பாதுகாக்கும் வகையில் கூடுதல் சலுகைகளை வழங்க வேண்டும்.
நிதிச்சுமை
மூத்தவர்களின் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கு அரசு தற்போது தேவையான நடவடிக்கைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி, வரி மற்றும் ஜி.எஸ்.டி., திருத்தங்கள், மூத்த குடிமக்களின் பராமரிப்புக்கு தேவையான பொருட்களுக்கான நிதிச்சுமையில் இருந்து, அவர்களை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களை அரசு மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில், முதியோர்களின் எண்ணிக்கை, தற்போது 10 சதவீதத்திற்கும் அதிகம். 2050ம் ஆண்டில் இது, 19.5 சதவீதத்தை எட்டும்

