ADDED : மே 29, 2025 01:30 AM

புதுடில்லி : செபி முன்னாள் தலைவர் மாதவி புரி புச் மீதான புகார்களை லோக்பால் அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது. மேலும், விசாரணைக்கு உத்தரவிட எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, அவர் மீதான குற்றச்சாட்டுகளை மேற்கொண்டு விசாரிக்க மறுத்துள்ளது.
யூகத்தின் அடிப்படையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எந்த ஆதாரமும் இன்றி, அரசியல் ஆதாயத்துக்காக அற்பமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும் அதன் உத்தரவில் தெரிவித்து உள்ளது.
அதானி குழுமத்துடன் தொடர்புடைய பண்டு ஒன்றில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. செபி தலைவர் ஆன பின்னும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிலிருந்து தொடர்ந்து ஆதாயங்களை பெற்று வந்தது, பிளாக்ஸ்டோன் நிறுவனத்துக்கு பயனளிக்கும் வகையில் செபி விதிமுறைகளை வடிவமைத்தது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை லோக்பால் விசாரித்தது.